காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழந்தார்… இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்கள்!

ஈ.வெ.ரா பேரனுக்கு அஞ்சலி

Dec 14, 2024 - 11:43
Dec 17, 2024 - 12:44
 1
காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழந்தார்… இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்கள்!

காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழந்தார்… இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்கள்!

ஈ.வெ.ரா பேரனுக்கு அஞ்சலி...

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டிருந்தார்.

அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் திகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈ.வெ.ரா காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஈ.வீ.கே.எஸ் இளங்கோவன் எம்.எல்.ஏவாக உள்ளார்.

ஈ.வெ.ரா பெரியாரின் பேரனான இவருடைய அரசியல் பயணம் குறித்தும் இவர் கடந்து வந்த பாதையின் வரலாற்று சுவடுகலையும் விளக்குகிறது இந்த முழு தொகுப்பு.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை பூர்வீகமாக கொண்ட இவர் மறைந்த சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத்தின் மகன் ஆவார்.

ஈ.வி.கே சம்பத்தின்  மறைவிற்கு பிறகு, அவரது தந்தையின் நண்பரும், அன்றைய நடிகருமான நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் 1977 முதல் 1989 வரை ஒன்றாக பயணித்து வந்தார்.

1984ம் ஆண்டு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்த போது இந்தியாவில் அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவியும், பிரதமர் இந்திரா காந்தி பஞ்சாப் தனிநாடு கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் காலிஸ்தான் அமைப்பினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தார்.

இதனால் தமிழகத்தில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பலமான அனுதாப ஆதரவு அலை வீசியதால் இக்கூட்டணி 1984 நாடாளுமன்ற  மற்றும் சட்டமன்ற தேர்தலில் பலமான வெற்றி பெற்றது.

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே அதுவரை இல்லாத அளவிற்கு காங்கிரஸ் கட்சி அதிக அறுதிபெரும்பான்மையோடு வெற்றி பெற்று ராஜீவ் காந்தி முதல் முறையாக பிரதமராக பதவியேற்று கொண்டார்.

தமிழகத்தில் அதிமுககாங்கிரஸ் பலமான வெற்றி பெற்றது அதிமுகவில் தனிபெரும்பான்மையோடு வெற்றி பெற்று எம். ஜி. ஆர் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

அத்தேர்தலில் சத்யமங்கலம் தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்தல் அரசியலில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலைவர் சிவாஜி கணேசன் ஆதரவு பிரிவினராக வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்திற்கு சென்றார்.

2004 நாடாளுமன்ற தேர்தலில் அன்றைய கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு (2,14,477) வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார்.

பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராகவும் பதவியேற்று கொண்டார்.

மேலும் அக்காலகட்டத்தில் மத்திய அமைச்சரவையில் மந்திரியாக இருந்த போதும் தமிழகத்தில் தனது கூட்டணி தலைமை கட்சியான திமுக தலைவர் மு. கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதனைத்தொடர்ந்து, இலங்கை ஈழத்தமிழர் படுகொலைக்கும், கருணானிதிக்கு எதிராக செயல்பட்டது ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தது என தொடர்ந்து பல்வேறான மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்து என கட்சியின் ஆதரவை பெற்று 2014 முதல் 2017 வரை காங்கிரஸ் கட்சி தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்று கொண்டார்.

பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுககாங்கிரஸ் கூட்டணியில் 41 தொகுதிகளை அன்றைய திமுக தலைவர் மு.கருணாநிதியிடம் கட்டாயமாக வாங்கினார்.

அதன் பிறகு 2023 ஆண்டு அவரது மூத்த மகனும் தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா திடீர் நெஞ்சு வலியால் எதிர்பாராத மரணத்தை தழுவினார் பின் அவர் விட்டு சென்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன்  பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் .

அதனைத்தொடர்ந்து 39 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி தேர்தலில்  அதிமுக எதிரணி வேட்பாளர் கே. எஸ். தென்னரசுவை 42 ஆயிரம் வாக்கு வித்யாசத்தில் தாேற்கடித்தார்.

இவருடைய அரசியல் பயணமானது தமிழக சட்டப்பேரவை உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர், தமிழக காங்கிரஸ் பொது செயலாளர், தமிழக காங்கிரஸ் தலைவர், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துரை இணை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்து காங்கிரஸ் மத்தியில் தனி அங்கீகாரத்தை பிடித்தார்.

இந்நிலையில்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.