விஜய்யை புகழ்ந்து பேசிய கனிமொழி!

Aug 12, 2024 - 19:28
Sep 9, 2024 - 19:37
 8
விஜய்யை புகழ்ந்து பேசிய கனிமொழி!

சிறந்த தெளிவுடனும்,தன் உழைப்பாலும் திரைத்துறையில் பெரிய இடத்தை அடைந்துள்ள விஜய் அதே தெளிவு, உழைப்புடன் அரசியலிலும் பயணிக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற சுய சக்தி விருதுகள் வழங்கும் விழாவில் கனிமொழிக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய கனிமொழி, அரசியல் மட்டும் அல்ல, எல்லா துறைகளிலும் பெண்கள் சாதிக்க பல தடைகள் இருப்பதாகவும், அதை தாண்டி பெண்கள் சாதிக்க வேண்டுமெனவும் கூறினார். அதே போல் நடிகர் விஜய் குடும்பத்துடன் தனக்கு சிறு வயதிலிருந்தே பழக்கம் இருக்கிறது எனவும், இந்த அளவிற்கு விஜய்யை மக்கள் கொண்டாடுவதற்கு காரணம் விஜய்யிடம் சிறந்த தெளிவும், கடின உழைப்பும் இருப்பது தான். அவருடைய பாதையை அவர் நன்கு புரிந்து கொண்டதால் தான் திரைத்துறையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைந்துள்ளதாகவும் கனிமொழி தெரிவித்தார்.

மேலும், விஜய் அதே தெளிவுடன் அரசியலிலும் பயணித்து வெற்றி பெற வேண்டுமெனவும் கூறியுள்ளார்.