போலீஸ் பத்திரிகையாளர் பின்னால ஏன் ஓடுறீங்க? நீதிபதிகள் ஆவேசம் !
சவுக்கு சங்கர் விடுதலை
போலீஸ் பத்திரிகையாளர் பின்னால ஏன் ஓடுறீங்க?
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கிய நிலையில் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறக் கூடாது; வசிக்கும் இடத்தை போலீசாருக்கு தெரிவித்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். சவுக்கு சங்கருக்கு மார்ச் 25ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
காவல்துறையினர் ஏன் பத்திரிக்கையாளர் பின்னால் ஓடுகிறீர்கள்? புகார் கொடுத்த மறுநாள் அதிகாலையிலேயே சங்கரை கைது செய்ததன் நோக்கம் என்ன?
கருத்து வேறுபாடு என்பது ஒரு ஜனநாயக உரிமை ; சட்டசபையில் கருத்து வேறுபாடு மதிக்கப்படுகிறது.
கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துபவர்கள் யாராவது துன்புறுத்தப்பட்டால் நீங்கள் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறீர்கள்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விரும்பினால் சிவில் நீதிமன்றத்தை அனுக வேண்டும்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் சவுக்கு சங்கரின் உடல்நிலையை கருத்தில் கொண்டும் வாதங்களை கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
