6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் பியா பாஜ்பாய்!

Aug 19, 2024 - 16:57
Sep 9, 2024 - 11:30
 7
6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் பியா பாஜ்பாய்!

உத்திர பிரதேசத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பியா பாஜ்பாய், ஏ.எல்.விஜய்யின் முதல் படமான ‘பொய்சொல்லப் போறோம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பின்னர் ஏகன், கோவா, பலே பாண்டியா, கோ, சட்டம் ஒரு இருட்டரை இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

கடைசியாக 2018ம் ஆண்டு வெளியான அபியும் அனுவும் படத்தில் நடித்தார்.

அதன் பிறகு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்த இவர், 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மாயன்’ படத்தில் இணைகிறார். ஜெ.ராஜேஷ் கண்ணா எழுது இயக்கி இருக்கும் இந்த படத்தை பாக்ஸ் அண்ட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சாய் தீனா, கஞ்சா கருப்பு, ராஜ சிம்மன் உள்ளிட்ட பலறும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு எம்.எஸ் ஜோன்ஸ் ரூபெர்ட் இசையமைத்துள்ளார். கே.அருண் பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். இரண்டு பாகமாக வெளிவரும் இந்த படம் பேண்டசி திரில்லர் படமாக உருவாகிறது.