எனக்கு 175 குழந்தைகள் இருக்கிறார்கள் என்று ஒருவர் சொன்னால் உங்களால் நம்ப முடியுமா !? ஆலமர திம்மக்கா பாட்டி (Banyan tree Thimmakka)

எனக்கு 175 குழந்தைகள் இருக்கிறார்கள் என்று ஒருவர் சொன்னால் உங்களால் நம்ப முடியுமா !? ஆலமர திம்மக்கா பாட்டி (Banyan tree Thimmakka)
1911ல் மைசூர் மாகாணம் துமகூர் மாவட்டம் குப்பி (Gubbi) என்ற ஊரில் பிறந்தவா் சாலுமரடா திம்மக்கா (Saalumarada Thimmakka) இவா் ஹுலிகலில் (Hulikal) சிக்கையா என்பவருடன் தனது 13வயதில் திருமண வாழ்கையை தொடங்கினார்.
கிராமத்தில் குவாரியில் இருவரும் கூலி வேலை செய்தார்கள். சிக்கைய்யாவுக்கு சொந்தமாக இருந்த இடத்தில் விவசாயமும் நடந்தது.
இருபது ஆண்டுகள் இருவரும் குழந்தையில்லாமல் மனதிற்குள் துயரத்தை மறைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினர்.
குழந்தை இல்லாத துக்கத்தை மறைக்க இருவரும் மரங்களை நட்டு தங்கள் குழந்தைகளாக நினைத்து வீட்டைச் சுற்றிலும் சிறிய சிறிய பழமரங்களை நட்டு வளர்த்து வந்த நிலையில்,
நிழல் தரும் மரங்களை நட்டால் ஊருக்கு குளிர்ச்சியும், பறவைகளுக்கு வாழ இடமும் கிடைக்கும் என்று இருவரும் கருதினர்.
இருவரின் முயற்சியாக ஹுலிகல் ஊர் சாலையோரம் ஒரு நாள் இருவரும் சேர்ந்து ஒரு ஆலமரக் கன்றை நட்டனர். அந்த சம்பவம் 1948ல் நடந்தது.
ஆண்டுகள் பல கடந்தன பிறகு ஒவ்வொரு மரமும் ஊரைப் பசுமையாக்கின. அங்கு பறவைகள் வரத் தொடங்கின. குடியேற ஆரம்பித்தன. கூடு கட்டின."
இருவரும் மரங்களுக்கு காவல் இருந்தனர். குழந்தைகளை வளர்ப்பது போல மரங்களை வளர்த்து மகிழ்ந்தார் திம்மக்கா. நான்கு கிலோமீட்டர் நடந்து போய் நீரை எடுத்துக்கொண்டு வந்து மரக்குழந்தைகளுக்கு கொடுத்தனர். தாகம் தீர்த்தனர். கன்றுகளை ஆடு மாடுகள் தின்னாமல் இருக்க அவற்றைச் சுற்றி முள் வேலியைப் போட்டனர்.
1991ல் திம்மக்காவையும், விட்டுவ சிக்கைய்யா காலமானார். கணவரின் நினைவுகளில் முடங்கிப் போகாமல் திம்மக்கா மீண்டும் கலத்தில் இறங்கினார். பாதையோரங்களைத் தேர்ந்தெடுத்து மரங்களை நட்டார்.
கணவர் மறைவுக்கு பிறகு இவர் எட்டாயிரம் மரங்களை தன்னந்தனி ஆளாக இருந்து நட்டார். திம்மக்கா ஊருக்கும், உலகிற்கும் சாலுமரடா திம்மக்கா ஆனார். சாலுமரடா என்ற கன்னட சொல்லுக்கு மரங்களின் வரிசை என்று பொருள். ஆலமரங்களை அதிகம் நட்டதால் சிலர் அவரை ஆலமரடா திம்மக்கா (Aala Marada Thimmakka) என்று அழைத்தனர். மரங்கள் வளர்ந்து பெரிதானவுடன் குழந்தைகள் இல்லாத துக்கம் மறைந்தது.
ஹலகுரு (Halaguru) சாலையின் விரிவாக்கத்திற்கு 2019ல் அரசு திட்டமிட்டது. அப்போது திம்மக்கா நட்ட 385 மரங்களை வெட்ட உத்தரவிடப்பட்டது.
உடனே திம்மக்கா அன்றைய முதல்வர் ஹெச் டி குமாரசாமியையும், துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவையும் நேரில் சென்று பார்த்தார். பலனாக 70 ஆண்டு வயதுடைய ஆலமரங்களை வெட்டும் திட்டத்தை அரசு கைவிட்டு மாற்று வழிகளைப் பரிசீலித்தது.
நூறாண்டைக் கடந்து 114ம் வயதை அடைந்திருக்கிறார் திம்மக்கா. நீண்ட ஆயுளுடைய இரகசியத்தைக் கேட்டால் மனது எப்போதும் பசுமையாக இருப்பதே காரணம் என்கிறார் அவர்.விருதுகள் அங்கீகாரங்கள் வந்து குவிந்தன.
2019ல் பத்மஸ்ரீ விருது. 2019 மார்ச் 16 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் விழா நடைபெற்றது. அன்று குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்திடம் இருந்து திம்மக்கா விருது பெற்றார்.
வாழும் கலை வழங்கிய விசாலாட்சி விருது, 2015ல் ஹூவினஹோல் (Hoovinahole) விஸ்வாத்மா (Vishwathma) விருது, 2016ல் உலகின் தலைசிறந்த பெண்களில் ஒருவராக உலகப் புகழ் பெற்ற பி பி சி நிறுவனத்தின் தேர்வு, பரிசாரா ரத்னா (Parisara Rathana) விருது, கிரீன் சாம்பியன் (Green champion) விருது, விருக்ஷமாதா (Vrikshamatha) என்று விருது பட்டியல் நீள்கிறது.
1999ல் 'Thimmakka Mathu 284 Makkalu' என்ற பெயரில் இவரது பணிகள் பற்றி ஒரு ஆவணப் படம் எடுக்கப்பட்டது. இப்படம் 2000ம் ஆண்டில் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இது இவரின் புகழை உலகறியச் செய்தது.
இனி என்ன ஆசை என்ற கேள்விக்கு ஹுலிகலில் கணவா், நினைவுகூரப்பட வேண்டும் என்பதற்காகவே அவருடைய பெயரில் மருத்துவமனை வேண்டும்" என்று தன் கனவு பற்றி கூறுகினாா்.
வாழ்நாளில் ஒரு விதையை முளைக்க வைத்து பாருங்கள் அப்பொழுதுதான் தெரியும் ஆல மரங்களில் தாய் திம்காவின் அந்த உணர்வும் மகிழ்ச்சியும்.