Apple Event 2024 | iPhone 16 Series

Sep 10, 2024 - 18:29
 69
Apple Event 2024 | iPhone 16 Series

Apple Event 2024 | iPhone 16 Series 

மொபைல் போன்களின் உலகில் தனக்கென தனி சந்தையை உருவாக்கி வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம், தங்களது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டில் முதன் முதலாக ஐபோன் மாடலை அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுவனம், ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை பெற்றுள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல் ஐபோன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள், இந்த வருடம் ஐபோன் 16 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் கணிசமான பங்கை பெற்றுள்ள ஐபோன், இந்த முறை ஏஐ அம்சங்கள், கேமரா கன்ட்ரோல் பட்டன் போன்றவற்றுடன் வந்துள்ளது. புதிய தலைமுறை ஐபோன்களில் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்கள் உள்ளன.
 
6.1 இன்ச் திரை அளவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன் 16, 6.7 இன்ச் திரை கொண்ட ஐபோன் 16 பிளஸ் ஆகியவை ஏ18 ப்ராசஸர் மற்றும் ஐஓஎஸ் 18 இயங்குதளம் கொண்டது. இவற்றில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா வொய்ட் பின்பக்க கேமரா, 12 மெகாபிக்சல் முன்பக்க கேமரா மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஐபோன் 16 (128ஜிபி) மாடலின் விலை ரூ.79,900 ஆகவும், ஐபோன் 16 பிளஸ் (128ஜிபி) மாடலின் விலை ரூ.89,900 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் ஆக்ஷன் பட்டன் மற்றும் கேமரா கன்ட்ரோல் பட்டன் ஆகியன இதில் இடம்பெற்றுள்ளன. ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போன்றவற்றில் ஏ18 புரோ சிப் கொண்ட 6.3 இன்ச் திரை அளவுடைய ஐபோன் 16 ப்ரோவும், 6.9 இன்ச் திரை அளவுடைய ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களும் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 48 மெகாபிக்சல் அல்ட்ரா வொய்ட் பின்பக்க கேமரா, 12 மெகாபிக்சல் முன்பக்க கேமரா போன்ற அம்சங்களுடன் வந்துள்ளது. மேலும், கேமரா கன்ட்ரோல் பட்டன் புரோ மாடல்களிலும் இடம்பெற்றுள்ளது. ஐபோன் 16 ப்ரோ மாடலின் ஆரம்ப விலை ரூ.1,19,900 ஆகவும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் ஆரம்ப விலை ரூ.1,44,900 ஆகவும் உள்ளது. வரும் 13-ம் தேதி முதல் புதிய ஐபோன் 16 வரிசை போன்களை முன்பதிவு செய்யலாம், 20-ம் தேதி முதல் பயனர்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.