கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கும் முடிவு ஒத்திவைப்பு! GST On UPI Transaction

Sep 11, 2024 - 00:18
 32
கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கும் முடிவு ஒத்திவைப்பு! GST On UPI Transaction

கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கும் முடிவு ஒத்திவைப்பு! GST On UPI Transaction

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54-வது ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து மாநில நிதித்துறை அமைச்சர்களும், மத்திய நிதித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகிய டிஜிட்டல் சேவைகளில் ₹2000க்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கு நிறுவனங்கள் விதிக்கும் GATEWAY FEESக்கு 18% ஜி.எஸ்.டி. வரி விதிப்பது குறித்து மத்திய அரசு கருத்து  கேட்டது. அதற்கு, உறுப்பினர்கள்  இந்த நடைமுறை

அமலப்டுத்தப்பட்டால் சிறிய அளவிலான பரிவர்த்தனை செய்யும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியதால், இறுதி முடிவு எடுக்காமல் பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகளுக்காக நிர்ணயக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

இந்த குழுவானது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வரி விதித்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து ஜிஎஸ்டி குழுவுக்கு அறிக்கையை சமர்பிக்கும். அதனால், தற்போது கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது குறித்த முடிவு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.