ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்கள் ஸ்டார்லிங்குடன் இணைய விருப்பம்!
Residential Lite Plan மற்றும் Standard Residential Plan என இந்த 2 திட்டங்கள்

ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்கள் ஸ்டார்லிங்குடன் இணைய விருப்பம்!
ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்கள் ஸ்டார்லிங்குடன் இணைந்து இன்டெர்நெட் சேவையை கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அப்படி இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனம் இணைய சேவையை கொண்டு வந்தால் அதன் கட்டணம் எவ்வளவு இருக்கும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் அருகாமை நாடான பூடானை தவிர வேறு எந்த நாட்டிலும் ஸ்டார்லிங்க் சேவை கிடையாது. பூடானை பொறுத்தவரை 2 திட்டங்களை ஸ்டார்லிங்க் வழங்கி வருகிறது.
அது Residential Lite Plan மற்றும் Standard Residential Plan என இந்த 2 திட்டங்கள் தான்.
இந்த இரண்டு திட்டங்களுக்கான வித்தியாசம் என்பது வேகத்தை பொறுத்தது.
முதல் திட்டத்திற்கு ரூ.3000 எனவும் இரண்டாவது திட்டத்திற்கு ரூ.4200 எனவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுவே அமெரிக்காவில் மாதம் ரூ.10,000 என்றும் கென்யாவில் மாதம் ரூ.830 எனவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்கள் ஸ்டார்லிங்குடன் இணைய விருப்பம் தெரிவித்திருக்கின்றன.
இருந்தாலும் இந்தியாவில் ஸ்டார்லிங்க் இன்டெர்நெட் சேவை கட்டணம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோராயமாக சொல்வதெனில், ஸ்டார்லிங்க் இன்டெர்நெட் கனெக்ஷனுக்கு தேவையான தொழில்நுட்ப கருவிகளை இன்ஸ்டால் செய்ய ரூ.25,000-35,000 வரை ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் மாதாந்திர கட்டணம் ரூ.5,000-7,000 வரை இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
நமது நாட்டில் இணைய சேவையை கொடுக்க கடந்த 2021ம் ஆண்டிலிருந்த ஸ்டார்லிங்க் முயன்று வருகிறது. இங்கு 6.44 லட்சம் கிராமங்களில் 6.15 லட்சம் கிராமங்களுக்கு 4G சேவை மட்டுமே கிடைத்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் 5G தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க ஆப்டிக் ஃபைபர் கேபிள்களும், டவர்களும் அவசியம்.
இவற்றுக்கான செலவு அதிகம் என்பதால் டெலிகாம் நிறுவனங்கள் கிராமப்புறங்களுக்கு இந்த டெக்னாலஜியை கொண்டு சேர்க்காமல் இருக்கின்றன. ஸ்டார்லிங்க் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் ஸ்டார்லிங்க் மூலம் இன்டெர்நெட் கனெக்ஷனை பெற பெரிய செல்போன் டவர் அவசியமில்லை. வீட்டு மாடியில் சிறிய ஆண்டனா இருந்தால் போதும். செயற்கைக்கோள் வழியாக டவர் நமக்கு கிடைக்கும்.
இது 25 Mbps முதல் 220 Mbps வரை இணைய வசதியை கொடுக்கும். கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டில் இணைய சேவையும், அதற்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2014-2024 இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இணைய இணைப்பு 25 கோடியிலிருந்து 96 கோடியாக உயர்ந்திருக்கிறது. பிராட்பேண்ட் இணைப்புகள் 6 கோடியில் இருந்து 94 கோடியாக (1,452% வளர்ச்சி) உயர்ந்துள்ளது.
வயர்லெஸ் இணையப் பயன்பாட்டை பொறுத்த அளவில், கடந்த 2014ம் ஆண்டு 61.66MB என்கிற அளவில்தான் இருந்தது. ஆனால் 2024ம் ஆண்டு 353 மடங்கு அதிகரித்து 21.30GB என உயர்ந்திருக்கிறது.
இந்த சூழலில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை கொடுத்தால் நிச்சயம் நல்ல லாபத்தை பார்க்க முடியும் என்று பலரும் கூறுகின்றனர்.