தனியார் விண்வெளி பயணத்தில் புதிய சாதனை படைத்த ஜேரட் ஐசக்மேன் மற்றும் குழுவினர் | Space X Pollaris Dawn Mission Elon Musk
தனியார் விண்வெளி பயணத்தில் புதிய சாதனை படைத்த ஜேரட் ஐசக்மேன் மற்றும் குழுவினர் | Space X Pollaris Dawn Mission Elon Musk
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கும், தொழிலதிபர் ஜேரட் ஐசக்மேனும் இணைந்து போலரிஸ் டான் எனப்படும் தனியார் விண்வெளி பயண திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ், ஜேரட் ஐசக்மேன் உள்ளிட்ட 4 பேர் டிராகன் விண்கலத்தில் புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு புறப்பட்டனர்.
15 மணி நேரத்தில், டிராகன் விண்கலம் சுமார் 1,400 கி.மீ. உயரத்திற்குச் சென்று புதிய சாதனை படைத்தது. தற்போது, 700 கி.மீ. உயரத்தில் புவி சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வரும் டிராகன் விண்கலத்தில் இருந்து ஜேரட் ஐசக்மேன் மற்றும் பொறியாளர் சாரா கில்லி ஸ்பேஸ் வாக் மேற்கொண்டனர்.
அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் வடிவமைத்த கவச உடைகள் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறதா என்பதை பரிசோதனை செய்தனர். மொத்தம் 5 நாட்கள் பயணத்தில், 30 வகையான பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளனர்.