தனுஷ் மீதான தடையை நீக்கிய தயாரிப்பாளர் சங்கம்! Dhanush

Sep 14, 2024 - 23:19
 9
தனுஷ் மீதான தடையை நீக்கிய தயாரிப்பாளர் சங்கம்! Dhanush

தனுஷ் மீதான தடையை நீக்கிய தயாரிப்பாளர் சங்கம்! Dhanush

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு பின் கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தனுஷ் மீது புகார் அளிக்கப்பட்டது.

தனுஷ் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை!

நடிகர் தனுஷ் தேனாண்டாள் மூவிஸ் நிறுவனம் மற்றும் 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பு நிறுவனத்திடமும் படம் நடிப்பதாக அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு பிறகு கால்ஷீட் கொடுக்காமல் இருப்பதாக தனுஷ் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. மேலும், நடிகர் தனுஷிற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் எவ்வித ஒத்துழைப்பும் வழங்காது எனவும் தனுஷை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி கலந்து ஆலோசிக்கவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

தனுஷ் விவகாரம் குறித்து நடந்த பேச்சு வார்த்தை!

இந்த விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடயே பல நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. மேலும் தனுஷ் நிதி விதிக்கப்பட்ட தடைக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.


இந்த நிலையில் தற்போது நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் தனுஷ் மீதான தடையை நீக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறியிருந்தனர்.

தனுஷின் புதிய படத்திற்கான கட்டுப்பாட்டை நீக்கிய தயாரிப்பாளர் சங்கம்!

 
இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், உள்ள தயாரிப்பாளர் சங்க கட்டிடத்தில், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பெப்சி உள்ளிட்ட சங்கங்கள் பங்கேற்றனர்.


இக்கூட்டத்தில், தனுஷ் 2 படங்களுக்கு அட்வான்ஸ் தொகை பெற்றுவிட்டு, கால்ஷீட் கொடுக்காமல் இருப்பதாக புகார் வந்தது குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், ஒரு தயாரிப்பாளருக்கு கால்ஷீட் கொடுப்பதாகவும், ஒரு தயாரிப்பாளருக்கு அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திருப்பி கொடுப்பதாக தனுஷ் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் முரளி மற்றும் 5 ஸ்டார் கதிரேசன் ஆகியோருடான பிரச்சனை முடிவுக்கு வந்தது. மேலும் தனுஷ் மீது விதிக்கப்பட்ட தடையையும் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நடிகர் தனுஷ் மீண்டும் இயக்கி நடிக்கும் புதிய படத்திற்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் தனுஷ் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.