திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி! Karthi | Pawan Kalyan

Sep 25, 2024 - 19:52
 8
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி! Karthi | Pawan Kalyan

திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி! Karthi | Pawan Kalyan

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள திரைப்படம் மெய்யழகன். இப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற கார்த்தியிடம், 'உங்களுக்கு லட்டு வேணுமா' என தொகுப்பாளர் கேட்டிருக்கிறார். அதற்கு, கார்த்தி லட்டு பற்றி இங்கு பேச வேண்டாம். அது சென்சிட்டிவான விஷயம், அதை தவிர்த்து விடுவோம் என சிரித்தபடி பதில் அளித்தார்.

கார்த்திக்கு கண்டனம் தெரிவித்த பவன் கல்யாண்!

இதனைத் தொடர்ந்து ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் செய்தியாளர்களை சந்தித்தபோது, சினிமா நிகழ்வில் லட்டுவை கிண்டல் அடிப்பீர்களா?லட்டு சென்சிட்டிவான விஷயமா, ஒருபோதும் அப்படி சொல்லாதீர்கள். நடிகராக கார்த்தியை மதிக்கிறேன். ஆனால் சனாதனம் என்று வரும்போது யோசித்து பேசுங்கள் என அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

மன்னிப்பு கேட்ட கார்த்தி- வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாண்!

இந்த நிலையில் நடிகர் கார்த்தி அவருடைய எக்ஸ் பக்கத்தில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பவன் கல்யாண் கார்த்தி மற்றும் மெய்யழகன் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், உங்களது அன்பான எண்ணத்தையும், விரைவான பதிலையும் எங்களது மரபுகளுக்கு நீங்கள் காட்டிய மரியாதையையும் நான் மனதார பாராட்டுகிறேன். திருப்பதி லட்டுகளின் புனிதத்தன்மை பல லட்சம் பக்தர்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்டவை, எனவே இதுபோன்ற விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதற்கு முன், அதனை மிக கவனமாகக் கையாள வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கார்த்தியின் மெய்யழகன் படம் வெற்றி பெற வேண்டுமென்று அவருடைய வாழ்த்துக்களையும் குறிப்பிட்டுள்ளார்.