நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!

Sep 28, 2024 - 11:39
 2
நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிர்மலா சீதாராமன் உட்பட சம்பந்தப்பட்ட பாஜகவினர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் ஜேஎஸ்பி அமைப்பு சார்பில் பெங்களூருவில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவில், ஜே.பி நட்டா, கர்நாடகா பாஜக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல், தற்போதைய பாஜக தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்தன் அடிப்படையில், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.