பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! Mk Stalin | PM Modi

Sep 27, 2024 - 10:06
 8
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! Mk Stalin | PM Modi

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! Mk Stalin | PM Modi

தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியை  விடுவிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

நிதி ஒதுக்கீடு கோரிக்கை!

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். மேலும் முதல்வருடன், அரசின் தலைமை செயலர் முருகானந்தம், முதல்வரின் உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சென்றுள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது, கல்வித்துறை, மீனவர் பிரச்சனை, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளார். மேலும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமரிடம் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.