நாசா கண்டறிந்த 1 மில்லியன் மைல் வேகத்தில் நகரும் மர்மப் பொருள்! NASA spots a mysterious object leaving the Milky Way!

Aug 22, 2024 - 00:16
 5

ஆகாயத்தில் நிறைந்துள்ள அதிசயங்கள் பெரும்பாலானவை இன்னும் கண்டறியப்படாமலேயே உள்ளன. காலங்காலமாக மனிதர்கள் விண்வெளியின் ரகசியங்களை அறிந்து கொள்வதில் தீரா வேட்கையுடன் செயலாற்றி வருகின்றனர். அறிவியல் வளர்ச்சி அந்த தேடுதலுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.

அந்த வகையில், உலகின் மிக மேம்பட்ட அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தற்போது விண்வெளியில் ஒரு மணிநேரத்துக்கு சராசரியாக 1 மில்லியன் மைல் (16,09,344 kmph) வேகத்தில் நகரும் மர்மப் பொருள் ஒன்றை கண்டறிந்துள்ளது. பால் வெளியை வீட்டு இந்த பொருள் 1 மில்லியன் மைல் வேகத்தில் நகர்கிறது.

பிளான்ட் 9 திட்டத்தின் கீழ் நடந்த ஆய்வில் இந்த பொருள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருளுக்கு CWISE J1249 என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். இன்பிராரெட் ஒளியின் வழியாக ஆராய்ந்த போது இந்த மர்ம பொருள் விஞ்ஞானிகள் கவனத்துக்கு வந்துள்ளது. இதை விண்களாகவோ நட்சத்திரமாகவோ உறுதியாக வகைப்படுத்த முடியவில்லை.

இந்த பொருளின் மையத்தில் ஹைட்ரஜன் காணப்படவில்லை. எனவே இதை வாயு நிறைந்த ராட்சத கிரகம் மற்றும் குறைந்த நிறை கொண்ட நட்சத்திரம் ஆகிய இரண்டு வரையறைக்கு இடைப்பட்ட பொருளாக வகைப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.