Milky Way-யில் புதிய வால் நட்சத்திரம் | C2023 A3 Tsuchinshan-Atlas
Milky Way-யில் புதிய வால் நட்சத்திரம் | C2023 A3 Tsuchinshan-Atlas
Milky Way என்று அழைக்கப்படும் பால்வெளி மண்டலத்தில் நம்மை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று வானில் தோன்றும் வால்நட்சத்திரங்கள். கிரகங்கள் சூரியனைச் சுற்றுவது போலவே, சில வால்நட்சத்திரங்களும் சூரியனைச் சுற்றுகின்றன. தூசி, கற்கள், பனியால் ஆன உடலே வால்நட்சத்திரம், இது நீளமான வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரியில் சீன வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வால்நட்சத்திரத்தை கண்டுபிடித்தனர். அதற்கு “Comet C/2023 A3 (Tsuchinshan-ATLAS)” என்று பெயர் வைத்தனர். இந்த வால்நட்சத்திரம் சுமார் 80,000 ஆண்டுகளாக சூரியனைச் சுற்றி வருகிறது.
இந்த வால்நட்சத்திரம் அக்டோபர் 1ம் தேதி பெங்களூரு வானில், சூரியன் உதிக்கும் நேரத்திற்கு முன்பு தென்பட்டது. அதை பார்த்த பலர் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த வால்நட்சத்திரம் சூரியன் உதிக்கும் நேரத்திற்கு முன்போ அல்லது சூரியன் மறைந்த பிறகோ தென்படும். மீண்டும் அக்டோபர் 12ம் தேதி இதை பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.