வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை!

Oct 5, 2024 - 22:14
 1
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மேலும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும், அனைத்து துறையினரும் இணைந்து செயல்படவும் வலியுறுத்தியுள்ளார்.
 
மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், வெள்ள தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்தும், பருவமழை காலங்களில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும்  அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு பெய்த அதிக கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நினைவில் வைத்து நடவடிக்கைகள் எடுக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை!

பருவமழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மின் பெட்டிகளை உயர்த்தி வைக்க அறிவுறுத்தப்படுகிறது. மீட்புப் பணிகளுக்குத் தன்னார்வலர்களைப் பயன்படுத்துவதுடன், அவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் வாட்ஸ் அப் குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் அரசு அதிகாரிகள் எப்போதும் மக்களுடன் துணை நிற்கின்றனர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மழைநீர் அதிகம் தேங்கும் இடங்களில் படகுகள், மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கு அருகே சமையல் கூடங்கள் அமைத்து உணவு தயாரிக்க நடவடிக்கை எடுக்கவும் துணை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.