முகூர்த்த கால் முன்பு பக்தர்கள் வழிபாடு!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஸ்ரீ சத்தியமூர்த்தி பிரசன்ன பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் வருகிற நவம்பர் 8ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் முகூர்த்தக்கால் சிறப்பு பூஜை சிறப்பு தீபாரதனை காண்பித்து கோவில் நிர்வாகிகள் உபயதாரர்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கோவில் வளாகம் முழுவதும் மந்திரங்கள் முழங்கி முகூர்த்தக்கால் நட்டு வைத்தனர்.
இதில், கலந்து கொண்ட அனைவரும் முகூர்த்தக்கால் முன்பு நின்று சிறப்பு வழிபாடு செய்தனர்.