முத்துவை மிஞ்சும் வேட்டையன்-ஜப்பானில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் - முதல் நாள் 30 காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ்புல்!

Sep 12, 2025 - 12:47
 37
முத்துவை மிஞ்சும் வேட்டையன்-ஜப்பானில் சூப்பர் ஸ்டார் ரஜினியின்  வேட்டையன் - முதல் நாள் 30 காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ்புல்!

முத்துவை மிஞ்சும் வேட்டையன்-ஜப்பானில் சூப்பர் ஸ்டார் ரஜினியின்  வேட்டையன் - முதல் நாள் 30 காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ்புல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அதில் ஜப்பானில் உள்ள அவரது ரசிகர்கள் எப்போதுமே ஸ்பெஷல் தாங்க. அதற்கு காரணம் ஜப்பானிய ரசிகர்கள் அதிகப்படியாக சூப்பர் ஸ்டாரை கொண்டாடி வருவதுதான். அங்கு ஏராளமான மக்கள் ரஜினியின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள்.

இன்னிலையில் அந்நாட்டில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு அதிக வசூல் செய்த முத்து படத்தைக் காட்டிலும் வேட்டையன் தற்போது பட்டையைக் கிளப்பி உள்ளது. ரஜினிக்கு போட்டி ரஜினிதான் என்பது போல முத்துவின் வசூலை வேட்டையன் முறியடிக்குமா? கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு, வடிவேலு, செந்தில் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் 1995இல் வெளிவந்த திரைப்படம் முத்து. தமிழில் மாபெரும் வெற்றிபெற்ற இப்படம் ஜப்பானில் ரசிகர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இப்படம் சுமார் 15 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து அசத்தியது. அதுபோலவே ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10, 2024 அன்று திரையரங்குகளில் வெளியானது. இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது படமாகும். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க டி.ஜே. ஞானவேல் இயக்கி இருந்தார்.

இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, அபிராமி, ஜிஎம் சுந்தர், ராவ் ரமேஷ், ரக்ஷன், ரமேஷ் திலக் என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்திருந்தது. தமிழில் மாபெரும் வெற்றிபெற்ற இப்படம் ஜப்பானிலும் வெளியானது. தற்போது ஜப்பான் ரசிகர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜப்பானில் கடந்த வாரம் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியான இந்தப் படம் 30-க்கும் அதிகமான காட்சிகள் திரையரங்கம் முழுவதும் நிரம்பி ஜப்பான் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஜப்பானில் வெளியான அனைத்து ஜப்பானிய படங்களைக் காட்டிலும் ரஜினியின் இந்த வேட்டையன் படம் பட்டையைக் கிளப்பி வருகிறது. வேட்டையன் வெளியாகி ஒரு வருடம் ஆகப்போகும் நிலையில் கூட மறுபடியும் அவர்களின் ஜப்பானிய மொழியில் வெளியிட்டு ஹிட் கொடுப்பது என்பது ரஜினி ரசிகர்களால் மட்டுமே முடியும். அதுமட்டும் அல்லாமல் முத்து படத்தின் வசூலை முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.