சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்துவிட்டேன் – முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!

திராவிட முன்னோடியும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் இன்று காலமானார். பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முரசொலி செல்வம், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
பெங்களூருவில் இருந்து அவரது உடல், இன்று பிற்பகல் சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் நிர்வாக ஆசிரியராகவும் முரசொலி செல்வம் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், முரசொலி செல்வம் குறித்து உருக்கத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்,
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியுமான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குறிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல் என் நெஞ்சத்தை தக்கியது.
எனவும், தலைவர் கலைஞர் நம்மை விட்டு பிரிந்த பிறகு நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோள் எனவும், கொள்கைத் துணையை இழந்து நிற்கிறேன், எனவும் முரசொலி செல்வம் மறைவு குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.