தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!

தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!

Dec 2, 2024 - 17:50
Dec 2, 2024 - 18:06
 1
தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!

தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் இளம் பெண் ஒருவர் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆலங்குடியை அடுத்த குப்பக்குடியை சேர்ந்த துர்கா என்பவர்  தனது குடும்பத்தோடு  அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய திருமணத்துக்கு முன்னரே தன்னுடைய அத்தை நண்பர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகவும் இதனால் தான் இவருக்கு திடீரெனதிருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது வரை அவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக பலமுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்  துர்கா ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.