66 வயதில் அதிபர் பதவி.... வெற்றி பெற்ற ஜான் டிராமணி மகாமா! John Mahama

ஜான் டிராமானி மகாமா 56.55% வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

Dec 10, 2024 - 17:04
Dec 10, 2024 - 17:39
 8
66 வயதில் அதிபர் பதவி.... வெற்றி பெற்ற ஜான் டிராமணி மகாமா! John Mahama

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் ஜான் டிராமணி மகாமா!

கானா நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ஜான் டிராமணி மகாமா வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மகாமாவின் முக்கிய போட்டியாளரும், துணை அதிபரும், ஆளும் கட்சியின் அதிபர் வேட்பாளருமான மஹமுது பவுமியா, தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

மொத்தமுள்ள 276 தொகுதிகளில், 267 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றதாகவும், அதில், 60.9 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதில், முன்னாள் அதிபரும், பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான ஜான் டிராமானி மகாமா 56.55% வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது 66 வயதாகும் மகாமா, கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016 வரை அதிபராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.