பிரபல நடிகர் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…! Actor Mohan Babu | Attacked journalists | Hyderabad

வீதிக்கு வந்த குடும்ப விவகாரம்…

Dec 11, 2024 - 12:36
Dec 11, 2024 - 13:49
 8
பிரபல நடிகர் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…! Actor Mohan Babu | Attacked journalists | Hyderabad

பிரபல நடிகர் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

பிரபல தெலுங்கு நடிகரான மோகன்பாபுவுக்கும் அவரது மகனுக்கும் இடையேயான சொத்து பிரச்சனை உக்கிரமான நிலையில், வீட்டிற்கு வந்த மகனை விரட்டியதோடு, செய்தியாளரையும் தாக்கிய சம்பவம் தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கு படம் மட்டுமல்லாது சூரரைப் போற்று உள்ளிட்ட தமிழ் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபல நடிகர் மோகன் பாபுவின் வீட்டில் சொத்து பிரச்சனை நாளுக்கு நாள் பூதாகரமாகி உள்ளது.

மோகன்பாபுவும், அவரது மகனும் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மாறி மாறி புகார் கூறி வந்த நிலையில்,

மனோஜின் படிப்புக்காக நிறைய செலவு செய்ததாகவும், மனைவியின் பேச்சை கேட்டு தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும் மோகன்பாபு குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் தான், மனோஜ் தனது நண்பர்களுடன் மோகன்பாபு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இரு தரப்பினரிடையே மோதல் முற்றிய போது அதை செய்தியாக்கி கொண்டிருந்த செய்தியாளரையும் மோகன் பாபு கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த 2 செய்தியாளர்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தற்போது மோகன்பாபு வை கைது செய்யப்படலாம் என கூறப்பட்ட நிலையில் மோகன்பாபு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.