ஈரோடு இடைத்தேர்தல் எப்போது?

ஈரோடு தொகுதி காலியனதாக அறிவிப்பு

Dec 17, 2024 - 14:30
Dec 17, 2024 - 16:54
 6
ஈரோடு இடைத்தேர்தல் எப்போது?

ஈரோடு தொகுதி காலியனதாக அறிவிப்பு... இடைத்தேர்தல் எப்போது?

காங்கிரஸின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் இதனை தெரியப்படுத்தியிருக்கிறது.

பொதுவாக ஒரு சட்டப்பேரவை தொகுதி காலியாகும் பட்சத்தில் 6 மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் டெல்லியில் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும்.

அப்போது, இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் முன்கூட்டியே வெளியிட்டு அப்போது இடைத்தேர்தல் நடத்துவதற்கு உண்டான நடவடிக்கைகள் தொடங்கும் என தெரிகிறது.

எனவே, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தேர்தல் ஆணையம் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.