தமிழ்நாடு யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

Dec 19, 2024 - 15:30
Dec 19, 2024 - 15:35
 5
தமிழ்நாடு யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாடு யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வனமிகு தமிழ்நாடு யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப்பதற்கு எனது கடும் கண்டனம்.

வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல!

கொட்டப்பட்டு இருக்கக்கூடிய மருத்துவ கழிவுகளால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதால் அனைத்து குப்பைகளும் உடனே அகற்றப்பட வேண்டும்; இனி இதுபோன்று பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அரசை வலியுறுத்துகிறேன் என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.