உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!

Dec 18, 2024 - 15:50
Dec 18, 2024 - 17:40
 149
உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!

டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா கவனிக்கட்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும் எனவும்,

அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம் எனவும் வாழ்க அம்பேத்கர். அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும் என்று துணை முதல்வர் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.