கேப்டன் விஜயகாந்திற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை புகழாரம்!
விஜயகாந்த். புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டவர்.
முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை புகழாரம்!
தேமுதிக தலைவரும் தமிழக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான நடிகர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வுக்காக தேமுதிக பேரணி நடத்த அனுமதி கோரிய நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை புகழந்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் கேப்டன் விஜயகாந்தினை நினைவுகூர்கிறேன்!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், கமல்
அன்பு நண்பர், தேமுதிக நிறுவனர், கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டாகிறது. அவரது இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்குப் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன். வறியோர்க்கு உதவும் ஈகை, எளியோரின் பக்கம் நிற்கும் நேர்மை, மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும்.
நடிகர் ரஜினிகாந்த்
என் அன்புக்குரிய கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு என் நினைவஞ்சலி.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர், இ.பி.எஸ்.,
தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த அடையாளம் கொண்டு கோலோச்சியவரும், தனது உயரிய மனிதநேயப் பண்புகளாலும், ஈகைப் பெருங்குணத்தாலும் தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவருமான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், அன்புச் சகோதரர், பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்தின் நினைவு நாளான இன்று, அவரின் பொதுவாழ்வின் சாதனைகளை நினைவுகூர்கிறேன்.
அ.ம.மு.க., பொதுச்செயலாளர், தினகரன்
தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனித்துவமிக்க தலைவராக திகழ்ந்த பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று. உதவி கேட்டு வரும் ஏழை, எளியோருக்கு உதவும் குணம் படைத்தவராகவும், தமிழ் மற்றும் தமிழக மக்களின் மீது அளவு கடந்த அன்பை கொண்டிருந்தவராகவும் திகழ்ந்த கேப்டன் விஜயகாந்தின் புகழ் எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். அவர் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டவர். அவரால் வாழ்ந்தவர்கள் பலர் உண்டு எல்லோரிடமும் சமமாக பழகக் கூடியவர்.