சவாலை சந்திக்கும் இந்தியா…. பிரதமர் எடுத்த முடிவு!
40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை

சவாலை சந்திக்கும் இந்தியா…. பிரதமர் எடுத்த முடிவு!
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி இன்று முதல் அமலுக்கு வந்ததால் இந்திய தொழில் துறை கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவை தண்டிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதலாக ஒட்டு மொத்தமாக 50% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட 40 நாடுகளுக்கு டெக்ஸ்டைல் பொருட்களின் ஏற்றுமதியை விரிவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலிம் ஸ்பெயின், நெதர்லாந்து, போலந்து, கனடா, மெக்சிகோ, பெல்ஜியம், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
தரம், நிலைத்தன்மை மற்றும் புதுமையுடன் இந்திய தயாரிப்பு டெக்ஸ்டைல் பொருட்கள் இருக்கும் என்ற உறுதியுடன் 40 நாடுகளுடன் தூதரகம் வாயிலாக பேச்சுவார்த்தைந் நடத்தப்பட இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.