முதலில் உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள் – அமைச்சர் அன்பில் மகேஷ்
பாமகவில் ஏற்பட்ட பிளவு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம்
முதலில் உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள் – அமைச்சர் அன்பில் மகேஷ்
மற்றவர்களை குறைசொல்பவர்கள் தாங்கள் நடத்தும் இயக்கத்தை முதலில் பார்க்க வேண்டும். பாமகவில் ஏற்பட்ட பிளவு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம் செய்துள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு அஞ்சலக சிறுசேமிப்பு புத்தகம், மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, மூன்று சக்கர வாகனம், மீனவர்களுக்கு மீன்பிடி உள்ளிட்ட நிவாரண தொகைகள் என 6 கோடியே 45 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், பாமக பிளவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் மற்றவர்களை குறை சொல்லும் பாமக அவர்கள் சார்ந்த அந்த இயக்கத்தை எப்படி நடத்துகிறார்கள் என்பது குறித்த செய்தி இரண்டு நாட்களாக முரசொலி பத்திரிகையில் வந்துள்ளது.
அவற்றை பார்த்தாலே அனைவருக்கும் தெரியும் என அளித்தார். அமைச்சர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.