மக்களுடன் முதல்வர் திட்டம்…

Aug 9, 2024 - 01:49
Sep 9, 2024 - 20:17
 8
மக்களுடன் முதல்வர் திட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் அன்றாடம் அரசுத்துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்களால் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் மக்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக நகர்புற பகுதிகளில் தொடங்கப்பட்ட திட்டமானது தற்போது இரண்டாம் கட்டமாக ஊரக பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 11ம் தேதி தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்ட திட்டமானது தொடர்ந்து அந்தந்த ஊராட்சிகளில்  நடைபெற்று வருகிறது.

அந்த வகையில்  தனியார் மண்டபம் தொண்டைமானேந்தல் பகுதியில் ஏழு ஊராட்சிகள் தொண்டைமானேந்தல் குன்னூர் வேட்டனூர் கீழ்க்குடி வாட்டாத்தூர் பழவரசன் கீழச்சேரி குண்டகவயல் பகுதியில் இத்திட்டம் மூலம் 30 நாட்களுக்குள் மக்களின் குறைகள் விரைந்து தீர்த்து வைக்கப்படுகிறது.

இத்திட்டம் மட்டுமல்லாது கலைஞரின் உரிமை தொகை, இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் போன்ற பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார்.

இந்த முகாமில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட தமிழக அரசின் 80க்கும் மேற்பட்ட துறைகள் சார்பாக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.

இதில்  7- ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக ஆவுடையார் கோவில் ஒன்றிய பெருந்தலைவர் உமா தேவியிடம் மனுக்களை அளித்தனர்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.