நடிகை ஹனிரோசுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அம்மா அமைப்பு

30 பேர் மீது வழக்குப்பதிவு

Jan 7, 2025 - 15:00
Jan 7, 2025 - 15:43
 5
நடிகை ஹனிரோசுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அம்மா அமைப்பு

நடிகை ஹனிரோசுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அம்மா அமைப்பு

சைபர் தாக்குதலுக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுத்த நடிகை ஹனி ரோஸுக்கு மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

நடிகை ஹனிரோஸ் குறித்து தரக்குறைவாக கருத்து பதிவிட்டவர்கள் மீது அவர் புகாரளித்ததன் எதிரொலியாக, ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை குறிப்பிட்டு அம்மா அமைப்பினர் வெளியிட்ட செய்தி குறிப்பில், பெண்கள் மற்றும் நடிகையின் தொழிலை இழிவுபடுத்த சிலர் வேண்டுமென்றே மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் ஹனி ரோஸின் சட்டப் போராட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.