நடிகர் சூரியின் உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

நடிகரின் சூரியின் உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டதாக வெளியான தகவல்

Dec 31, 2024 - 12:15
Dec 31, 2024 - 12:25
 10
நடிகர் சூரியின் உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

நடிகர் சூரியின் உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

நடிகரின் சூரியின் உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இரு ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாகவும், கழிவு நீர்த் தொட்டிகள் இருக்கக் கூடிய பகுதிகளில் தான் ஹோட்டலுக்கான காய்கறிகள் வெட்டப்படுவதாகவும் சமூக ஆர்வலர் முத்துக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறார். பெருச்சாளி மற்றும் கரப்பான் பூச்சி ஆகியவை இருக்கக் கூடிய இடங்களில் தான் உணவு தயாரிப்பதாக வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்திருப்பதாகவும், ஹோட்டலுக்கு என்று அனுமதிக்கப்பட்ட இடத்தை விட இரு மடங்கு இடத்தை ஆக்கிரமித்து இருப்பதாகவும், விதிகளை மீறியுள்ளதால் நடிகர் சூரியின் ஹோட்டலுக்கு சீல் வைக்குமாறும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த விவகாரம் மதுரை முழுவதும் வேகமாகப் பரவிய நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள ஹோட்டல் நிர்வாகம் நடிகர் சூரியின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தனி நபரின் தூண்டுதலின் பேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் கூடுதல் இடம் கேட்டு அதற்கான வாடகையையும் செலுத்தி வருவதாகவும் தெரிவித்த நிர்வாகத்தினர் உணவுகள் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளின் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

விசாரணைக்கு பிறகு இது குறித்த தகவல்கள் வெளியாகும்.