நா.த.க சீமான் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கைது
300க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
நா.த.க சீமான் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கைது!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் காலை முதலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் புத்தாண்டு நிகழ்ச்சி நடைபெறும் காரணத்தால் பாதுகாப்பு அளிக்க முடியாத சூழலில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தடையை மீறி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கட்டுப்படுத்த முடியாத சூழலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள், கைது செய்யப்பட்டு வருகின்றனர்.