அரசு நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள்

Jul 23, 2024 - 01:48
 17
அரசு நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள்

அரசு நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள்

சென்னை பெரு  மாநகராட்சி ராமாபுரம் 155 வார்டு பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் மாநில நிதி மூலதனத்தில் இருந்து ரூபாய் 1 கோடியே 16 லட்சம் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து வகுப்பறைகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.இதனை மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி பங்கேற்று பூஜையுடன் துவக்கி வைத்தார்.இந்த பூமி பூஜையில் அதே அரசு பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள் பங்கேற்றனர். உடன்  மாமன்ற உறுப்பினர் செல்வகுமார், மாமன்ற உறுப்பினர்கள் , பொது நலச் சங்க நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பூமி பூஜையில் எம்எல்ஏ,கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் ,ஆசிரியர்கள் உடன் பள்ளி குழந்தைகள் பங்கேற்றது அங்கிருந்த பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியைய் ஏற்ப்படுத்தியது. அதனை தொடர்ந்து அதே பகுதியில் புதிய அரசு ரேசன் கடை ஒன்றை எம்எல்ஏ கணபதி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது