நல்ல மனம் வாழ்க, தர்மத்தின் வழியில் வாழ்வு நடத்து – திருவள்ளுவர்
நாட்டில் நிகழும் நன்மை, தீமையை ஆராய்ந்து ஆட்சி செய்யாதவர் நாட்டை இழக்க நேரிடும்
நல்ல மனம் வாழ்க, தர்மத்தின் வழியில் வாழ்வு நடத்து – திருவள்ளுவர்
- நல்ல மனம் கொண்டவர்கள் நலமுடன் வாழ்வார்கள்
- நற்செயலில் ஈடுபட்டால் இறந்த பின்னும் புகழுடன் வாழலாம்
- குழந்தை, பெற்றோர், உறவினர்களுக்கு உதவுவது திருமணம் செய்தவரின் கடமை
- நல்ல குணம் கொண்ட மனைவி அமைந்தவனுக்கு குறை ஏதும் இருக்காது
- நற்பண்புள்ள குழந்தையை பெற்றவனுக்கு எந்த பிறவியிலும் துன்பம் நெருங்காது
- புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்த்து, கணவரின் வருமானத்திற்கு ஏற்ப வாழ்பவளே நல்ல பெண்
- பிறர் மீது அன்பு காட்டு, சிறப்பான வாழ்க்கை அமையும்
- நன்மை எது, தீமை எது என்பதை அறிந்து நன்மை செய்பவர் பெருமைக்குரியவர்
- உயிர்கள் மீது இரக்கம் காட்டுபவரே உயர்ந்தவர்
- தர்மத்தின் வழியில் வாழ்வு நடத்து
- பொருளை இழந்தால் மீண்டும் பெறலாம், அருளை இழந்தால் பெறவே முடியாது
- பணம் நிலையில்லாதது, அதைக் கொண்டு நிலையான தர்மத்தை செய்
- யார் எது சொன்னாலும் அதிலுள்ள உண்மையை தெரிந்து கொள்
- வறுமையில் இருந்தாலும் தாயின் பசியை போக்க தீய வழியில் செல்லாதே
- நாட்டில் நிகழும் நன்மை, தீமையை ஆராய்ந்து ஆட்சி செய்யாதவர் நாட்டை இழக்க நேரிடும்