திராவிடம் என்று சொன்னால் சிலறுக்கு பயம் ஏற்படுகிறது – முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் மாணவிகள் என்னை அப்பா, அப்பா என்று அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது – முதல்வர் ஸ்டாலின்

Jan 11, 2025 - 12:43
Jan 11, 2025 - 12:48
 4
திராவிடம் என்று சொன்னால் சிலறுக்கு பயம் ஏற்படுகிறது – முதல்வர் ஸ்டாலின்

திராவிடம் என்று சொன்னால் சிலறுக்கு பயம் ஏற்படுகிறது – முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் மாணவிகள் என்னை அப்பா, அப்பா என்று அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது – முதல்வர் ஸ்டாலின்

சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளில் பேசிய முதல்வர் ஸ்டாலின் சட்டசபை உறுப்பினர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். திட்டமிட்டு கவர்னர் விதிமீறலில் ஈடுபடுகிறார். அரசு அளிக்கும் அறிக்கையை முழுமையாக வாசிக்க வேண்டிய கடமை கவர்னருக்கு உள்ளது. தமிழகம் வளர்ந்து வருவதை கவர்னரால் ஜீரணிக்க முடிய வில்லை என தெரிகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை அரசியல் நோக்கத்தோடு அவமதித்தால் கவர்னர் பதவிக்கு இழுக்கு என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் வரும் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று, 7வது முறையாக ஆட்சி அமைக்கும். நான் செல்லும் இடங்களில் மக்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியை விடியலின் சாட்சி. மகளிருக்கு கட்டணமில்லா இயக்கப்படும் பஸ்களுக்கு 'ஸ்டாலின் பஸ்' என்றே பெயர் வைத்து விட்டனர். மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தால் மாணவிகள் உயர் கல்வி படிப்பது 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கல்லூரி மாணவிகளுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ், மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் மாணவிகள் என்னை அப்பா, அப்பா என்று அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது.

திராவிடம் என்ற சொல்லை பார்த்து சிலர் பயப்படுகின்றனர். அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சியை திராவிடம் மாடல். நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி தமிழகத்தின் பங்கு 5.4 சதவீதமாக உள்ளது. நாட்டின் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் பணம் வீக்கம் அதிகரித்து நிலையில் தமிழகத்தில் பணவீக்கம் குறைந்துள்ளது. மனித வளத்தை வளர்ப்பதில் மஹாராஷ்டிரா, குஜராத்தை விட தமிழகம் முன்னணியில் உள்ளது. போராட்டம் நடத்துவது தவறு அல்ல என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.