அதை பற்றி பேச முதல்வருக்கு என்ன தகுதி இருக்கிறது – அன்புமணி
பெரியாரின் வாரிசு என கூறினால் மட்டும் போதாது
![அதை பற்றி பேச முதல்வருக்கு என்ன தகுதி இருக்கிறது – அன்புமணி](https://channel5tamil.com/uploads/images/202502/img_67ac6d1b292a43-81214568-60173843.gif)
அதை பற்றி பேச முதல்வருக்கு என்ன தகுதி இருக்கிறது – அன்புமணி
சமூக நீதி பற்றி பேச முதலமைச்சருக்கு தகுதி இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் சாதிவாரி கணக்கெடுப்பை தெலுங்கானாவில் நடத்த முடியுமென்றால்,
தமிழ்நாட்டில் ஏன் நடத்த முடியாதென கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூக நீதியின் அடித்தளத்தை பற்றி நன்கு தெரிந்து கொண்டு பிறகு அதைப்பற்றி பேசுங்கள் எனவும்,
இட ஒதுக்கீடு பெறும் மக்களை பற்றி கூட தெரிந்து கொள்ள முதல்வருக்கு மனமில்லையா எனவும்
வார்த்தைக்கு வார்த்தை தங்களை பெரியாரின் வாரிசு என கூறினால் மட்டும் போதாது என முதல்வர் ஸ்டாலினை அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.