அறநிலையத்துறையிடன் இருந்து 44,121 கோயில்கள் மீட்கப்படும் - அண்ணாமலை

ஹிந்து சமய அறநிலையத்துறை முற்றிலுமாக ரத்து செய்யப்படும்

Feb 20, 2025 - 17:51
 15
அறநிலையத்துறையிடன் இருந்து 44,121 கோயில்கள் மீட்கப்படும் - அண்ணாமலை

அறநிலையத்துறையிடன் இருந்து 44,121 கோயில்கள் மீட்கப்படும் - அண்ணாமலை 

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அரசின் பிடியில் இருந்து கோவில்கள் அனைத்தும் விடுவிக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


உலகின் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள கோவில்கள், ஆன்மிக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநாடு மற்றும் கண்காட்சி திருப்பதியில் நடைபெற்றது.

இதில், 58 நாடுகளில் இருந்து ஹிந்து, சீக்கியம், பவுத்தம் மற்றும் ஜைன மதங்களை சேர்ந்த ஆன்மிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் கோவில் கலாச்சாரம், பண்பாடு, பராமரிப்பு, நிர்வாகம், பக்தர்கள் மற்றும் அரசுகளின் பங்கேற்பு குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டன. 

இதனை தொடர்ந்து, அண்ணாமலை பேசுகையில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஹிந்து சமய அறநிலையத்துறை முற்றிலுமாக ரத்து செய்யப்படும் எனவும், அரசின் பிடியில் இருந்து விடுவிக்கப்படும்,

கடந்த 120 ஆண்டு காலத்தில் நம் என்னவெல்லாம் இழந்தோமோ அவற்றை பெரியோர்களின் ஆலோசனையின் பேரில் மீட்டெடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

குறிப்பாக, கோயில்களுக்கு வரும் வருமானங்களை வைத்து, அப்பகுதியில் கல்வி நிறுவனங்கள், உள் கட்டமைப்பு போன்றவற்றை ஏற்படுத்த முடியும என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.