நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்! Durga Stalin Temple Visit

நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்! Durga Stalin Temple Visit
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள சப்தவிடங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற நீலாயதாட்சி அம்மன் ஆலயத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி, துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆலயத்தின் உள்ளே சென்ற துர்கா ஸ்டாலின், அங்கு நீலாயதாட்சி அம்மன் சிலை முன்பு அமர்ந்து மனமுருக பிரார்த்தனை செய்துள்ளார்.
பின்னர், கோவிலை வலம் வந்து கொடிமர நமஸ்கார பீடத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வேண்டியுள்ளார். அதனை தொடர்ந்து, நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள, அதிபத்த நாயனாரையும் வேண்டி சுவாமி தரிசனம் செய்துள்ளார்.