பூச்சாண்டி வேலையெல்லாம் வேண்டாம் என்னோடு நேருக்கு நேர் மோதுங்க ஸ்டாலின்!
நேருக்கு நேர் போட்டியிட வாருங்கள்

பூச்சாண்டி வேலையெல்லாம் வேண்டாம் என்னோடு நேருக்கு நேர் மோதுங்க ஸ்டாலின்!
கொள்கையை வெறும் பேச்சுக்கு மட்டுமே வைத்துக் கொண்டு குடும்பத்தை வைத்தே கொள்ளை அடிக்கிறீர்கள். கொள்ளை அடித்து ஆட்சி செய்யும் உங்களுக்கே இப்படி என்றால் நான் சொந்தமாக உழைத்து சம்பாதித்து அரசியலுக்கு வந்திருக்கிறேன்.
மக்களை சந்திக்க எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு இடையூறுகள் வேண்டாம் சார் நான் ஒன்னும் தனி ஆள் இல்லை சார்.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டு பேருக்கு நடுவே தான் போட்டியே அது, ஒன்று தவெக மற்றொன்று திமுக.
பூச்சாண்டி வேலைகளை விட்டுவிட்டு தேர்தலில் நேருக்கு நேர் போட்டியிட வாருங்கள் பார்த்துக்கொள்ளலாம்.
மக்களை சந்திக்கவே இவ்வளவு தடை விதிக்கும் இந்த திமுக அரசு ஆட்சிக்கு வர வேண்டுமா? என மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
தவெகவின் போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்க விடாது துரத்திக் கொண்டே வரும் என விஜய் ஆவேசமாக பேசியுள்ளார்.