உங்களுக்கு அழ தான் தெரியும்னா அழுதுட்டே இருங்க….. திமுகவை கடுமையாக சாடிய மோடி!

தூக்குமேடையில் இருந்து தமிழக மீனவர்கள் காப்பற்றப்பட்டுள்ளனர்

Apr 7, 2025 - 14:17
Apr 7, 2025 - 15:45
 4
உங்களுக்கு அழ தான் தெரியும்னா அழுதுட்டே இருங்க….. திமுகவை கடுமையாக சாடிய மோடி!

உங்களுக்கு அழ தான் தெரியும்னா அழுதுட்டே இருங்க….. திமுகவை கடுமையாக சாடிய மோடி!

தமிழகத்திற்கு போதுமான நிதி அளித்தும் கூட சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள் என பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை விட கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

இது தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு இது மிகவும் உதவியிருக்கிறது.

அவர்களால் அழ மட்டுமே முடியும் அவர்கள் அழுதுவிட்டு போகட்டும். முன்னதாக 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ.900 கோடி மட்டுமே கிடைத்து வந்தது. அப்போதெல்லாம் யார் கூட்டணியில் இருந்தார்கள் என்று நான் சொல்லவே தேவையில்லை.

மத்திய அரசின் முயற்சியின் காரணமாக, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,700-க்கும் மேலான மீனவர்கள் இலங்கையில் இருந்து மீட்டுக்கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மிக முக்கியமாக, சில காலங்களுக்கு முன்பு தூக்குமேடையில் இருந்து தமிழக மீனவர்கள் காப்பற்றப்பட்டுள்ளனர்.

வழக்கமாக தமிழகத்தில் இருந்து சில தலைவர்கள் எனக்கு கடிதம் எழுதுவதுண்டு அந்த கடிதமும் ஆங்கிலத்தில் இருக்கிறது கையெழுத்தும் ஆங்கிலத்தில் இருக்கிறது குறைந்தபட்சம் அவர்கள் கையெழுத்தையாவது ஆங்கிலத்தில் போட வேண்டாமா? என பிரதமர் மோடி பேசியுள்ளார்.