ஜியோ வருகைக்கு முன்னால் பலரது மாதாந்திர தொலைபேசி கட்டணம் 30 ரூபாய் 50 ரூபாய் இருந்தது. Internet தேவைப்படுபவர்கள் மட்டுமே Internet க்கும் சேர்த்து ரீசார்ஜ் செய்தனர். மற்றவர்கள் வாய்ஸ் கால் மட்டுமே உபயோகப்படுத்தினர். ஆனால், ஜியோ வருகைக்குப் பிறகு Internet உடன் சேர்ந்த பேக்கையே நெட் பேக் தேவை இல்லாதவர்களும் கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலை திணிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு மாத குறைந்தபட்ச மாதாந்திர தொலைபேசி கட்டணம் 300 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு மாதம் என்பது 4 வாரம் (28 நாட்கள் ) என்று ஒரு வருடத்திற்கு13மாதங்கள் ஆக்கி விட்டார்கள். Data யையும் Voice Call ஐயும் பிரிக்க வேண்டும். Voice Call தனி சார்ஜ் வேண்டும் என்பவர்களுக்கு அதை மட்டும் கொடுக்க வேண்டும். Data தினம் 2 GB/ 2.5.GB என்பதை விட்டு விட்டு மாதம் 10 GB /20 GB / 30 GB / 60 GB / 100 GB என்ற Slab கள் வைத்து தேவைப்படுபவர்கள் தேவைப்படும் Data Package Recharge செய்யும் வசதி செய்து தர வேண்டும். அன்றைய நாள் Data வை அன்றே பயன்படுத்த முடியாவிட்டால் அது வீணாகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது பற்றிய உங்களுடைய கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.