தமிழகத்தில் ரூபாய் குறியீடு எப்படி புழக்கத்தில் வந்தது தெரியுமா? உருவாக்கிய ஆயிரத்தில் ஒருவர் இவர் தான்..
உதயகுமாருக்கு 2அரை லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது

தமிழகத்தில் ரூபாய் குறியீடு எப்படி புழக்கத்தில் வந்தது தெரியுமா?
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பல்வேறு விமர்சனங்களும், மோதல்களும் வெடித்து வரும் இந்த சூழலில் தற்போது மற்றொரு வாதம் தலையெடுத்திருக்கிறது.
தமிழக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் முகப்பு பக்கத்தில் எல்லார்க்கும் எல்லாம் என்ற வாசங்களோடு இந்திய லட்சினைக்கு பதிலாக ரூபாய் எனவும் தமிழ்நாடு அரசு மாற்றியிருப்பது தான் இந்த விவாதத்தின் போர்க்கொடியாக உள்ளது.
இந்த இந்திய குறியீடு எப்படி பயன்பாட்டிற்கு வந்தது, இதை உருவாக்கியது யார்? இதை தேர்வு செய்ததின் நோக்கம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக அளவில் அமெரிக்க டாலர், யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட் மற்றும் ஜப்பானின் yen போன்ற தனித்துவமிக்க லட்சனைகளை அடையாளப்படுத்துகின்றன
இருப்பினும் இந்திய ரூபாய்க்கு நீண்ட காலமாக தனித்துவமான லட்சனைகள் ஏதும் இல்லாமல் இருந்து வந்தது.
குறிப்பாக, ஆங்கில வார்த்தையில் ருபீஸ் என்ற வார்த்தையை RS என்று சுருக்கியே நீண்ட காலமாக நாம் பயன்படுத்தி வந்தோம்.
அதே போல் தமிழில் எழுதும் போது ரூபாயை சுருக்கி ரூ எனவும் எழுதி வந்தோம்.
இதற்கிடையே, இந்தியா ரூபாய்க்கான குறியீட்டை தனித்துவமாக உருவாக்க வேண்டும் என மத்திய அரசு முனைப்பு காட்டியது.
எனவே அதற்கான போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் ஆயிரக்கனக்கானோர் பங்கேற்று ஆயிரக்கணக்கான குறியீடுகளையும் வடிவமைத்தனர்.
இதில், இறுதியாக 5 குறியீடுகளை மட்டுமே நிபுணர் குழு தேர்வு செய்தது.
அதில், இறுதியாக தமிழ்நாட்டை சேர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் என்பவர் உருவாக்கிய குறியீடு மத்திய அரசால் புதிய குறியீடாக தேர்வு செய்யப்பட்டது.
உதயகுமார் தற்போது கவ்ஹாத்தி ஐஐடி தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த குறியீடு உருவாக்கத்திற்காக உதயகுமாருக்கு 2அரை லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும், தேவநாகரீ எழுத்தான ர, ரோமன் எழுத்தான ஆர். ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்பட்ட இந்த புதிய குறியீட்டை, கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 15 தேதியிலிருந்து, இந்திய ரூபாய்க்கான புதிய குறியீடாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனிடையே, மத்திய அரசு உருவாக்கிய இந்த குறியீட்டை தமிழ்நாடு அரசு மாற்றியது தான் இன்றையை சர்ச்சையாக எழுந்துள்ளது.