என் பெயரில் ஒரு வீடு கூட இல்லை – பிரதமர் மோடி

தான் நினைத்தால் மாளிகை கட்டியிருக்க முடியும்; ஆனால் மக்களுக்கு வீடு கொடுப்பதே தன்னுடைய கனவு

Jan 3, 2025 - 16:14
Jan 3, 2025 - 16:31
 8
என் பெயரில் ஒரு வீடு கூட இல்லை – பிரதமர் மோடி

என் பெயரில் ஒரு வீடு கூட இல்லை – பிரதமர் மோடி

 

எனக்காக நான் வீடு கட்டிக்கொண்டது இல்லை; ஏழைகளுக்காக 4 கோடி வீடுகள் கட்டியுள்ளேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தான் நினைத்தால் மாளிகை கட்டியிருக்க முடியும்; ஆனால் மக்களுக்கு வீடு கொடுப்பதே தன்னுடைய கனவு எனவும் தெரிவித்தார்.

தான் முதலமைச்சராக இருந்த போது எதிர்கட்சிகள் இடஒதுக்கீடு அரசியலில் ஈடுபட் ட தாகவும் பழங்குடியினர் பகுதியில் எந்த ஒரு அறிவியல் பள்ளியும் செயல்பட வில்லை என கூறீனார்

கடந்த 30 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கை தன்னுடைய ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.  

மேலும், நாட்டிலுள்ள மகள்களின் பெயர்களில்  வீடுகளை வழங்க தொடர்ந்து அவர் பணீயாற்றீ வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக வளர்ச்சியைப் பற்றி பேசி ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி ஊழலில் ஈடுபட்டு வருகிறது. டெல்லி மக்கள் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்து தங்களை விடுவிக்க முடிவு செய்துவிட்டனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.