சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார்!
நேபாளத்தைப் போன்று கலவரம் ஏற்படும்

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார்!
லடாக்கில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தனிமாநில அந்தஸ்து கோரி லடாக்கில் போராட்டம் நடைபெறக்கூடிய நிலையில் நேற்று முன்தினம் நடந்த கலவர வழக்கில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஆர்வளர் சோனம் வாங்சுக் கடந்த பல ஆண்டுகளாக இந்த போராட்டத்தை பல்வேறு வகையில் முன்னெடுத்து வருகிறார்.
கடந்த 2024 ம் ஆண்டில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி சோனம் வாங்சுக் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார், அதே கருத்தை முன்வைத்து பாதயாத்திரையும் மேற்கொண்டார். இவருக்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவு அளித்ததையடுத்து,
மீண்டும் மாநில அந்தஸ்து விவகாரம் வேகமெடுக்கமே லடாக்கில் கலவரம் வெடித்தது.
கடந்த சில நாட்களாக நடந்த இந்த கலவரம் வன்முறையாக தீவிரமெடுத்தது. இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தொடர்ந்து போராட்டம் நீடித்து வந்த நிலையில் இங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
மேலும், சோனம் வாங்சுக் நேபாளத்தைப் போன்று கலவரம் ஏற்படும் என பேசியிருந்ததால் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே போல், இவர் வெளியிட்ட அறிக்கைகள் மூலம் மக்களைத்தூண்டியதாக வாங்சுக் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வன்முறை காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பெரும் அரசியல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.