நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!

Jul 31, 2024 - 02:05
 9
நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!
நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!
நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!

புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து நகராட்சியின் கடைசி கூட்டம் இன்று நடைபெற்றது. 

நாய் தொல்லை பிரச்சனையை தீர்க்க வேண்டும் நகராட்சி தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

புதுக்கோட்டை நகராட்சி நூற்றாண்டு கண்ட நகராட்சியாகும் மிகவும் பழமையான நகராட்சியாக உள்ள நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன.

பாரம்பரியமிக்க புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்படும் என்று அரசுக்கு கோரிக்கை என்பது அதன் அடிப்படையில் தமிழக அரசு சட்ட சபையில் புதுக்கோட்டை உள்ளிட்ட நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தி உத்தரவிட்டது மேலும் சட்டமன்றத்தில் இதற்கான சட்ட திருத்தமும் செய்யப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு  ஆளுநர் ஆர் என் ரவியும் புதுக்கோட்டை உள்ளிட்ட நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

புதிதாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாநகராட்சியில் 11 ஊராட்சிகளை இணைத்து தான் மாநகராட்சியாக தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே 42 வார்டுகள் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ளது மாநகராட்சியாக தரம் உயர்த்த பின்னர் 60 வார்டுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு வரும் 15ஆம் தேதி புதுக்கோட்டை மாநகராட்சியாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடும்.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக பெயர் மாற்றம் செய்யப்படும் .

இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சியின் கடைசி கூட்டம் இன்று நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டத்தில் நடைபெற்றது தலைவர் திலகவதி செந்தில் தலைமை நடைபெற்ற கூட்ட த்தில் துணைத் தலைவர் லியாகத் அலி உள்ளிட்ட 42 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் .

முதலில் மாநகராட்சியாக தரம் உயர்த்திய தமிழக முதல்வர் அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

இதனைத் தொடர்ந்து 250 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உறுப்பினர்கள் நகராட்சியில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது நாய் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தீர்மானத்தில் ஒரு சில குறைகள் உள்ளன அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என பேசினர்.