குஜராத்தில் மட்டுமே இவ்வளவா?
குஜராத்தில் 1 வாரத்தில் மட்டுமே ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் கடந்த 11 நாட்களில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
டெல்லி மற்றும் குஜராத் காவல்துறை சிறப்பு பிரிவினர் குஜராத் மாநிலம் அங்கலேஷ்வரில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் நடத்திய சோதனையில் 518 கிலோ கொக்கைன் போதை பொருள் நேற்று கைப்பற்றப்பட்டது.
அதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 5ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதேபோல் கடந்த 10ஆம் தேதி, 2ஆம் தேதி என போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும், ஒரே வாரத்தில் 5 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைபொருள் கடத்தப்பட்டுள்ளது குஜராத் அரசியலில் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.