சற்றுமுன்.... தொடங்கிய கூட்டு நடவடிக்கை கூட்டம்....திகாருக்கு செல்லவும் தயார் - சிவக்குமார்
உறுதியாக அறிவித்த கர்நாடக அரசு

சற்றுமுன்.... தொடங்கிய கூட்டு நடவடிக்கை கூட்டம்....திகாருக்கு செல்லவும் தயார் - சிவக்குமார்
தொகுதி மறு வரையறை தொடர்பாக தி.மு.க நடத்தும் கூட்டு நடவடிக்கை கூட்டத்தில் பங்கேற்க பஞ்சாப், கேரளா, தெலுங்கானா முதல்வர்கள் வருகை தந்துள்ளனர்.
சென்னை வந்த பிற மாநில முதல்வர்களை அமைச்சர் பொன்முடி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார்.
அப்போது பேசிய அவர், தொகுதி மறு வரையறை விவகாரத்தில், முதல் அடியை எடுத்து வைத்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன்.
இந்திய நாட்டின் அரசியல் அமைப்பையும், கூட்டாட்சி முறையையும் பாதுகாக்க மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்காக பெருமைப்படுகிறேன்.
இது ஒரு துவக்கம் மட்டுமே இன்று கூடும் அனைவரும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க உள்ளோம் என சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
நமது தொகுதிகள் குறைக்கப்படுவதை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம் பொருளாதார ரீதியாகவும், கல்வியிலும் நாம் வேகமாக முன்னேறி உள்ளோம்.
ஒற்றுமையாய் இருந்து நமது தொகுதிகள் எதுவும் குறைக்கப்படாமல் பாதுகாப்போம் எனவும்,
பா.ஜ.க கட்சியினர் கருப்புக் கொடி காட்டுவதை வரவேற்கிறேன் அவர்கள் என்னை திகார் சிறைக்கு அனுப்பினாலும் பயப்பட மாட்டேன் என சிவக்குமார் தெரிவித்துள்ளார்.