ஜனவரி 9ல் அறிவிப்பு வெளியாகும்….அவர் அண்ணா என்கிறார் ; நாங்கள் தம்பி என்கிறோம்!
கூட்டணி குறித்து சூசகமான பதில்

ஜனவரி 9ல் அறிவிப்பு வெளியாகும்…. அவர் அண்ணா என்கிறார் ; நாங்கள் தம்பி என்கிறோம்!
விரைவில் கூட்டணியை அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் சூசகமாக பதில் அளித்துள்ளார். விஜய் விஜயகாந்தை அண்ணா என கூறியது பற்றி பேசிய அவர்,
விஜய் அண்ணா என்று சொன்னார் நாங்கள் அவரை தம்பி என்று சொல்கிறோம் அவ்வளவுதான்,
கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் வரும் ஜனவரி 9ம் தேதி எங்களுடைய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இந்த 20 வருடங்களில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தியது தேமுதிக தான். தேமுதிக மாநாட்டை பொறுத்தவரை அதற்கு நிகர் தேமுதிக தான் கேப்டன் விஜயகாந்திற்கு நிகர் அவர் மட்டும் தான்.
என்றாலும் கூட, விஜய் மாநாட்டை குறை சொல்லக்கூடாது அவர்கள் போராடியிருக்கிறார்கள் அவர்களுடைய முயற்சி அது அதை வென்றிருக்கிறார்கள்.
எனவே, எந்த மாநாடும் தேமுதிகவிற்கு ஒரு நிகர் கிடையாது தேமுதிக என்றைக்குமே தேமுதிக தான்.
எங்களுக்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள் அதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.