ஆளுநருக்கு பதில் ஸ்டாலின் வேந்தராக செயல்படுவார்!
10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும்

ஆளுநருக்கு பதில் ஸ்டாலின் வேந்தராக செயல்படுவார்!
சட்டப்பேரவையில் 2வது முறை நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
ஆளுநர் மாநில அரசுக்கு ஒரு நண்பராக, வழிகாட்டியாக, தத்துவஞானியாக செயல்பட வேண்டுமே தவிர, அரசியல் தேவைகளுக்கு ஏற்ப செயல்படக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசியல் சட்ட மாண்புகளை மதிக்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் ஆளுநர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து இன்று உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பில், மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறுவுறுத்தி உள்ளனர்.
வெளியிட்டுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததாகவே கருதப்படும், இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநருக்கு பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி வேந்தராக செயல்படுவார் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பொருந்தக்கூடியது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், இது மாபெரும் வெற்றி தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் எனவும் கூறியுள்ளார்.
ஆளுநர் வழக்கில் சிறப்பான தீர்ப்பை பெற்றுத்தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களுக்கு சிறப்பு சேர்க்கும் இந்த தீர்ப்பு மூலம் தமிழ்நாடு தலை நிமிர்ந்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.