”தமிழை உரக்கச்சொன்ன தமிழன் காலமானான்” பெரும் தலைவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!
தமிழில் கேள்வி கேட்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர்

”தமிழை உரக்கச்சொன்ன தமிழன் காலமானான்”
பெரும் தலைவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்.
தமிழிசையின் தந்தையான, 93 வயதான குமரி ஆனந்தன் வயது மூப்பு மற்றும் சிறுநீரகப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
குமரி மாவட்டம் அகஸ்தீவரத்தில் பிறந்த இவர், 4 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
சுமார் 19 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
சாத்தான் குளம், ராதாபுரம், திருவொற்றியூர் தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர், 1977 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தேர்வு பெற்றார்.
1980ல் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி, பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
தமிழக தலைவர்களில் பலமுறை பாதயாத்திரைகளை மேற்கொண்டவர் குமரி அனந்தன்.
மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சி மணியாச்சி என்ற பெயர் வர காரணமாக இருந்தவர் குமரி அனந்தன்.
நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் குமரி அனந்தன்.
தமிழில் தந்தி விண்ணப்பங்கள், மணியார்டர் வேண்டும் விமானங்களில் தமிழ் பயன்படுத்த வேண்டும் எனவும் போராடியவர்.
கடந்த ஆண்டு தமிழக அரசு குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்தது.